நட்பின் நினைவுகள் துணையாக 555
தோழியே...
பள்ளி நாட்களில் காரணம் தெரியாமலே
சண்டை போட்டுகொண்டோம்...
கல்லூரி நாட்களில் நீவேறு நகரத்திலும்
நான்வேறு நகரத்திலும்...
சந்திக்கும் நாட்களில்
முகமெங்கும் புன்னகையோடு...
கைகொடுத்து அடித்துகொள்வோம் பார்த்து
எவ்வளோ நாட்களாயிற்று என்று...
இன்று நான் வேலை தேடி
அயல்நாட்டில் தனிமையில்...
வாரத்தில் ஒருமுறை உங்களோடு
நான் பேசினாலும்...
என் தனிமையின்
சோகங்களை மறக்கிறேன்...
உங்கள் சிரிப்பினை
கேட்கும் போதெல்லாம்...
களங்கமில்லா ஒரு மழலையின்
சிரிப்பை கேட்கிறேன்...
நான் செய்த பாக்கியம் நீங்கள்
எனக்கு தோழிகளாக கிடைத்தது...
நான் கேட்பதெல்லாம்
ஜென்மங்கள் எதுவாயினும்...
நீங்களே வேண்டும்
என் தோழிகளாக.....