நட்பின் காதல்

நட்பின் காதல்
ஆம்.,
ஆணுக்கும் பெண்ணுக்குமான
நட்பின் காதல் !!!

சகோதரன் இல்லா
சகோதரிக்கு தான் தெரியும்
""என் நண்பன்""
என்பதன் உணர்வு...

ஒரு பெண்
தன் எண்ணங்களின் எழுச்சியாய்
குமுறல்களின் உறைவிடமாய்
அகமகிழும் தருணம்
தன் நண்பனின் அருகாமை...

தன்னை பெண்ணாகவும்
பேரப் பொருளாகவும்
எள்ளி நகையாடக்
காத்திருக்கும்
பெரும்பாலான ஆண்களின் இடையே
அவளை
அவளாகவே பார்க்கும்
முதல் ஆணின் கண்கள்.....
அவை உணர்த்தும்
நட்பின் காதலை..
ஆம்.,
ஆணுக்கும் பெண்ணுக்குமான
நட்பின் காதலை !!!

ஓர் ஆண்
பெண்ணிடம் பகிரமுடியாத,
ஆனாலும்
பெண்ணிடம் மட்டுமே பகிரக்கூடிய
பல நுண்ணிய உணர்வு பரிமாற்றங்கள்,
கொஞ்சமும் காமம் கலக்கா
உரையாடல்கள்
இவை உரைப்பதும்
நட்பின் காதலே ....

உலகமே தங்கள் உறவை
உருக்குலைக்கத் தயங்கா
பல சந்தர்ப்பங்களையும்
சங்கடங்களையும் தாண்டி

""நண்பனாகவும்"" -----""தோழியாகவும்"" மட்டுமே

நிலை நிற்கும் கணங்கள் கூறும்
கவிதை தான்
நட்பின் காதல்....
ஆம்.,
ஆணுக்கும் பெண்ணுக்குமான
நட்பின் காதல் !!!

காதல் எனும் வார்த்தை
உருவாக்கப்பட்டதே
வாசிப்பவர்களுக்காகவும்,
யோசிப்பவர்களுக்காகவும்,
நேசிப்பவர்களுக்காகவும்,
ஆம்.,
ஒருவர் மற்றோருவருடைய உலகை........

அத்தகைய களங்கமில்லா காதல் கொண்ட
உறவுக்கு பெயர் தான்
நட்பு....
ஆணுக்கும் பெண்ணுக்குமான நட்பு !!!!!!

எழுதியவர் : தாரணி தேவி (12-Feb-16, 4:22 pm)
Tanglish : natpin kaadhal
பார்வை : 670

மேலே