எண்ணத்தில் துளிர்த்தவை - 7
அமோக விற்பனை
கட்சிக் கொடிகள்
கட்சித் தாவலுக்கு அனுமதி ....1
மகனுக்கு பெயர் சூட்டினார்
ராமவில்சன் முகமது
சமத்துவபுரம் .....2
காலையில் திருமணம்
மாலையில் விவாகரத்து
கூட்டணிக் கட்சிகள் ...3
அழைக்காமல் வந்தாள்
கேட்காமல் தந்தாள்
அறை வாங்கியவர் கதறல்... 4
கவிதைகள் எழுதினேன்
காதலை உணர்த்திட
பேனாவை பேப்பர் காதலித்தது ...5
மகன்கள் அனுமதி இல்லை
பெற்றவர்கள் வேண்டுகோள்
முதியோர் இல்லம் ...6
பிரிந்திடுவர் இணையாமல்
முத்தமிடும் காதலர்கள்
கடற்கரை மணலும் நீரும் ...7
தூரப்பார்வையில் அற்புதம்
கிட்டப்பார்வையில் அதிசயம்
குமரியில் நிற்கும் வள்ளுவன் ....8
சோகமுடன் தனிமையில்
மரணத்தை அறிந்ததால்
வருடத்தின் கடைசி தேதி ...9
தற்கொலைக்கு வரிசையில்
தனக்குத் தானேகொள்ளி
வாக்குச் சாவடி ....10
பழனி குமார்
14.02.2016