சில கவித் துளிகள்
வெட்டப்பட்டது மரம்
போடப்பட்டது மேடை
- அமைச்சர் தலைமையில் 'மரம் நடு விழா'
அப்பாவிற்கு கவலை
மகனுக்கு சந்தோஷம்
- இரு விரல்களுக்கிடையே சாம்பலாகின்றது உடல்நலம்
கொட்டும் மழை விண்ணில்
அழும் குழந்தை மண்ணில்
- விவசாயின் வீடோ துயரத்தில்
நிறைய நேரம் பிரிந்திருக்கின்றனர்
எப்போதாவது சந்திக்கின்றனர்
-கடிகார முட்கள்
மகளிடம் அன்பு
மனைவியிடம் காமம்
- முத்தம்
அடிப்பார்களோ என்ற பயம்
பிடித்துவிடுவார்களா என்ற பதற்றம்
- தெரு நாய்களின் போராட்டம்
மூண்டதால் பிரச்சனை
இறந்தது அப்பாவி மக்கள்
ஓடியது இரத்த வெள்ளம்
- சாதிக் கலவரம்
வருடங்கள் கடக்கின்றன
வரன்களும் மாறுகின்றன
- இவள் இன்னும் செல்லவில்லை மாமியார் வீட்டிற்கு
நிம்மதியில் பெற்றோர்
கண்ணீருடன் மகள்
- கல்யாண மேடையில் பிரியாவிடை
தோழி காதலியானால்
காதலி மனைவியானால்
- வேறொருவனுக்கு
(ஹைகூ எழுத விழைகிறேன் முதல் முயற்சியாய் சில கவித் துளிகள் பிழை இருப்பின் சுட்டிக்காட்டவும்
- நன்றி)