தோழியே

ஆர்ப்பரிக்கும் இருள்திரையின் வெளிச்சமடி
வெண்ணிலவு! பூமிக்குள் ஒளிர்ந்ததடி-நீயோ
ஆகாய கூட்டத்தின் தங்க தாரகையடி
அண்டத்தில் என்னுள் கலக்க பிறந்தாயடி
விண்ணின் நிலவுக்கு துணை இல்லையடி
சகியே உன்னையன்றி நானோ தனியடி
விலாசம் தேடி அகதியாய் அலைந்தேனடி
சங்கமமாய் உன்னுள் நான் கலந்தேனடி
தேடல் இல்லா உலகம் வீணடி
தேன்மலரே நான்தேடிய உறவு நீயடி
கண்ணீரில் மொட்டிட்டு நட்பாய் மலர்ந்ததடி
கிளைஞருக்கு இன்று அர்த்தம் தந்தாயடி
கண்மணி உன்னை நான் மறவேனடி
கருவிழியாய் எண்ணி உறவை காப்போமடி
காலம் முழுதும் நீ வருவாயடி
காத்திருக்கும் சரிரத்திலும் நீ வேண்டுமடி

எழுதியவர் : புகழ்விழி (17-Feb-16, 9:39 am)
Tanglish : thozhiye
பார்வை : 1747

மேலே