அவர்கள்

அர்த்த சாஸ்த்திரத்தில் கௌடில்யன்
"தாசர்கள்" என்றான்
அவர்களை ..!

கடனாளியோ..சிறு குற்றவாளியோ
தன்னையே அடகு வைக்க துணிந்தவரோ
நிஷ்பாதிதா எனப்படுவராம்..!

சிறு தொகைக்கு அவர்களைப் பெற்றால்
"தாசர்கள்" எனும் சேவகர் ஆவாராம்..
அவர்கள்..

பௌத்த இலக்கியங்களோ ..
"காப்யாரி" என்றன அவர்களை..

இறந்த உடலை ..மனிதக் கழிவுகளை
சுமக்க வைத்திடலும் எச்சில் உணவை துடைக்க செய்திடலும்
அசிங்கப் படுத்துதலோ..அவமானப் படுத்துதலோ ..
நிர்வாணமாக்கி விடுவதோ ..பெண்ணென்றால்
கற்பினை சூறையாடுதலோ செய்கின்
..
கொடுத்த பணம் செல்லாமல் போய்
தாசர்களை அது விடுவிக்குமாம்..
கெளடில்யன் கண்ட நெறிகள் !
..
முகலாய சாம்ராஜ்யங்களில்
அவர்கள் ..
அடிமைகள் என்றாகி ..மத்திய
ஆசியாவிற்கும் பாரசீகம் ..இன்னும் பல
இடத்து சுல்தான்களுக்கும்
விற்கப் பட்டாலும்..
..
அவர்கள்..
அடிமைகள் ..
என்றாலும்..
..
பல உயர் பதவிகளை
பரிபாலன உரிமைகளை
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தில்
அடைந்தவர்கள்..
..
அவ்வளவு ஏன்..
இன்றும் ..
சுய லாபங்களுக்காக
ஆங்காங்கே உள்ள ராஜாக்களின்
கூஜாக்கலாகவும் ..கைக்கூலிகளாகவும்..
பெரும் புள்ளிகளாகவும்
கரும் புள்ளிகளாகவும்..
..
விழுந்தே கிடக்கிறார்கள்..
இந்த மண்ணில்..
முன்னொரு காலத்தில்
அடிமைகளாக இருந்தாலும்
..
இப்போது வேறு பல ..
அவதாரங்களில்
உலா வருகிறார்கள்..
..
பாவம் ..
அவர்கள்!
..
அடிமைகள்
என்றும் மறைவதில்லை!

எழுதியவர் : பாலகங்காதரன் (கருணா) (18-Feb-16, 9:56 am)
Tanglish : avargal
பார்வை : 196

மேலே