கோலம்

கோலம்
காலத்தின் கோலத்தில்
வாழ்க்கை ஒரு
கம்பி கோலம்
கம்பி கோலம்
புள்ளிகள் அதிகம்
வளைவுகளும் அதிகம்
புள்ளிகள் நேரமாக
வளைவுகள் நாமாக
புள்ளிகளுக்கு எற்ப
வளைவுகள் வளைகிறது
வளைவுகள் இல்லா
வாழ்க்கை இல்லை
வளைவுகளே
வாழ்க்கையும் இல்லை
கீழ் தொடங்கும்
வளைவுகள்
கீழும் மேலும்
செல்கிறது ஆனால்
மேலேதான் முடிகிறது
சூரியனை போல்