தொடுவதால்

உன்னை
பார்க்கும் போதெல்லாம்
உன்னை தொட்டு பேச
வேண்டுமென்றே
துடிக்கிறேன்...
என்னை
காமனென்று
கருதிவிடாதே...
என் உடலில் உள்ள
எல்லா பாகங்களையும்
தொட்டு பார்த்திருக்கிறேன்
ஒரு பொழுதும்
என் உயிரை
தொட்டது போல
எனக்கு
தோன்றியதே இல்லை
உன்னை
தொடும் போது மட்டும்
என் உணர்வுகள்
என் உயிரை
தொடுவதாய்
உள்ளத்தில் உளறுகிறது...

எழுதியவர் : ராஜகுமரன் (20-Feb-16, 5:11 pm)
பார்வை : 74

மேலே