காக்கிசட்டை

இறக்கமற்றவனே ;
இதயமில்லையா?
காக்கி உடுப்பை மாட்டும்போதே -
கழற்றிவிட்டாயோ !

கால் இழந்த கணவனிடம் -
காட்டுகிறாய் - உன் வீரத்தை :
காட்டுமிராண்டி காவலனே !

கணவன் முன்னே ;
கட்டியவளை அடிக்கும் ;
கையாலாகாதவனே !

ஆயிரம் அடிவாங்கினாலும் ;
அழும் குழந்தையை -
அந்தரத்தில் பிடிக்கும் :
அற்புதம் தாயடா !

தாயின் தவிப்பும் புரியாத -
தடிமாட்டு தண்டமே !
வாழ்க்கையை தொலைத்தவரிடம்தான் உன் ;
வலிமையை காட்டுவதோ !

எழுதியவர் : hajamohinudeen (21-Feb-16, 1:06 pm)
பார்வை : 95

மேலே