முதிர்கன்னி
தொலைந்து போக நினைத்து
திருவிழா செல்கிறேன்
பலர் தொலைகிறார்கள்,
நான் மட்டும்
அப்படியே
வீடு திரும்புகிறேன்......
திருடப்பட வேண்டும் என்று
தெருவில் கிடக்கிறேன்
பலர் திருடப்படுகிரார்கள்
நான் மட்டும்
தீண்டபடாமல் கிடக்கிறேன்
இந்த பட்டம்
பறக்காமல் கிடக்கிறது
யாரும் நூல்விடாததால்
-து.மனோகரன்