தற்காலிக கைதிகள்

பள்ளமேடான சாலை
பரதமாடும் பேருந்து
பிரசவ வலியில்
பிரயாணிக்கும் பயணிகள்
வேலைக்குப் போகும்
அக்கூட்டத்திடையே
வேலைசெய்து கொண்டிருக்கும்
அவ்விருவர்
ஒருவன் பேசாமலே...
ஒருவன் பேசிக்கொண்டே...
சில்லரையின் சிக்கல்களும்
சாலையின் மோசங்களும்
அவரவர் முகத்தை
முறுக்குச்சுட வைத்தாலும்
நிறுத்தம் வந்தால் ஊதுவதும்
சப்தம் கேட்டால் நிறுத்துவதும்
தவறாத அணிச்சை செயலாகிறது
அந்தத் தற்காலிக கைதிகளுக்கு.

எழுதியவர் : தினம் அரசன் (25-Feb-16, 4:32 am)
பார்வை : 112

மேலே