முத்திரை பதித்த சித்திரை

எத்திரை போட்டு மறைத்தாலும்
இத்திரை மறையாதென்பேன் அத்திரை
எத்திரை என்று கேட்டால்
` சித்திரை என்று தமிழில்
முத்திரை பதித்து சொல்வேன்
எந்நித்திரை களைந்து போயினும்

பங்குனி உதிர்ந்து
சித்திரை பூக்கும்
முக்கனி பழங்கள்
இத்திங்கள் காய்க்கும்
சோலைகள் மகிழ்ந்து
இதழ்களை விரிக்கும்
இளந்தளிர் தென்றல்
இதயத்தை பறிக்கும்
கிளிகள் இணைந்து
கொஞ்சி குலாவும்
குயில்கள் பாடி
களித்து உலாவும்

ஓடையில் ஊரும்
நீர் சுவை கூடும்
கோடையில் வெகுசனம்
மாற நிழல் நாடும்,
நாசியுள் மலர்களின்
நறு மணம் வீசும்
புது மனங்கள்
சேர்ந்து திருமணம் பேசும்

வசந்த விழாவின்
சிறந்த தொரு மாசம்
இத்திங்கள் என்றுமே
வாழ்க்கையில் இனிமையை கூசும்

பசுமை பாரின்
வாட்டத்தை போக்கும்
பள்ளி மழலை
விடுமுறை பார்க்கும்

உழைப்பாளர் இனத்துக்கே
புகழினை சேர்க்கும்
உள்ளத்தின் இருளினை
பேரொளியால் மாய்க்கும்

இன்பத்தின் மாமாதம்
இம்மாதம் என்பேன்
சித்திரையை இயற்கை
சித்திரம் என்பேன்

எழுதியவர் : ராஜகுமரன் (25-Feb-16, 7:27 pm)
பார்வை : 177

மேலே