முன்பதிவு செய்யாத பயணிகளுக்காக அந்தோதயா எக்ஸ்பிரஸ்

IST

முன்பதிவு செய்யாத பயணிகளுக்காக அந்தோதயா எக்ஸ்பிரஸ்
வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2016-2017-ம் ஆண்டுக்கான மத்திய ரயில்வே பட்ஜெட்டில் டிக்கெட் முன்பதிவு செய்யாத பயணிகள் வசதிக்காக அந்தோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறும்போது, "அதிக கூட்ட நெரிசல் உள்ள நீண்ட தூர பயண மார்க்கத்தில் செல்லும் டிக்கெட் முன்பதிவு செய்யாத பயணிகள் வசதிக்காக அந்தோதயா விரைவு ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பகிறது.

இதேபோல் தொலைதூரம் செல்லும் ரயில்களில் முன்பதிவு செய்யாதவர்கள் அதிக அளவில் பயணிக்கும் வகையில் 3 முதல் 4 தீனதயாளு பெட்டிகள் இணைக்கப்படும். இப்பெட்டிகளில் குடிதண்ணீர், மொபைல் சார்ஜர் வசதி ஏற்படுத்தப்படும்

எழுதியவர் : (26-Feb-16, 7:49 am)
பார்வை : 37

மேலே