முகில்கள் துறவு பூண்ட நீலவானம்

முகில்கள் துறவுபூண்ட நீலவானத்தை
ரசித்திட அவன் கவிஞன் இல்லை உழவன்
அவனுக்கு
வானம் என்றால் மழை !
----இலக்கணம் சாரா வரிகள்

முகில்கள் துறவுபூண்ட நீலவானைப் பார்த்து
ரசிக்க அவன்கவிஞன் இல்லை உழவன்
நிலமுழுது நீர்பாய்ச்சி நெல்வளர்ப் போனுக்கு
வானமென் றாலதும ழை !

---இது அளவடி இன்னிசை வெண்பா
இதை மூன்றடியில் சொல்லிப் பார்ப்போம்

முகில்கள் துறவுபூண்ட நீலவானைப் பார்த்து
ரசிக்க கவிஞனில்லை நல்லே ருழவனுக்கு
வானமென் றாலதும ழை !
----இது சிந்தியல் இன்னிசை வெண்பா
ஆர்வலர்கள் கூர்ந்து கவனிக்க . பயிற்சியாகவும் பாடமாகவும் இது அமையும்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (26-Feb-16, 10:24 am)
பார்வை : 133

மேலே