சொல்லாராய்ச்சிக் கட்டுரை 1 - Vaidyanathan Vedarethinam

பாவாணரின் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
=====================================================
........................................ஒரு பகுதி.......................
=====================================================
தமிழர் பல தமிழ்ச் சொற்களை வழங்காமைக்குக் காரணம், தம்மையும் தம் மொழியையும் பற்றி அவர்கள் கொண்டுள்ள தாழ்வுணர்ச்சியே. வடமொழி தேவமொழி என்றும், அம் மொழியையும் அதன் சொற்களையும் வழங்குவது இறைவன் விரும்பும் செயல் என்றும், தவறான கருத்துக்களைத் தமிழர் கொண்டதனாலேயே, தமிழின் பெருமை குலையத் தொடங்கியது. தமிழை
அழியாது காக்க வேண்டுமெனில், அதன் வழக்கிழந்த சொற்களையெல்லாம் மீண்டும் வழக்கிற்குக் கொண்டுவர வேண்டும். வழக்கிழந்து போயிருக்கும் சில சொற்களின் பட்டியல் வருமாறு:-
======================================================
அகநாழிகை...............=கர்ப்பக்கிரகம்
அகவை........................=வயது
அங்காடி.......................=கடைத்தெரு
அடுத்தூண்..................=ஜீவனத்துக்கு விட்ட நிலம்
அடையவளைந்தான்..=கோயிலின் புறச்சுற்று மதில்
அணல்...........................=(காளையின்) தாடி
அணிகலம்...................=வாகனம்
அணியம்......................=தயார் நிலை
அமரோசை.................=அவரோகணம்
அரியணை...................=சிங்காசனம்
அல்லங்காடி...............=மாலைக் கடைத்தெரு
அறம்..............................=தருமம்
அறிவன்........................=புதன்
அறைகூவல்...............=சவால் விடுதல்
ஆடவன்.......................=புருஷன்
ஆடிடம்........................=விளையாடுமிடம்
ஆடை...........................=வஸ்திரம்
ஆரோசை....................=ஆரோகணம்
ஆவணம்.....................=பத்திரம்
ஆளுங்கணம்............=மேனேஜிங் கமிட்டி
ஆளோடி......................=நடைவழி
ஆளோட்டி..................=SENTRY BOX
இட்டேற்றம்...............=பொய்க்குற்றம் சாட்டல்
இதழகல் பா..............=நிரோட்டியம்
இதழ்குவி பா............=ஓட்டியம்
இயம்............................=வாத்தியம்
இயம்புதல்..................=வாத்தியம் வாசித்தல்
இயவன்.......................=வாத்தியக்காரன்
இழப்பு..........................=நஷ்டம்
இளவேனில்..............=வசந்தம்
இன்னிசை..................=சங்கீதம்
உகப்பு...........................=CHOICE
உறாவரை/முற்றூட்டு=சர்வமான்யம்
ஊக்கம்........................=உற்சாகம்
ஊட்டகர்.....................=போஷகர்
ஊட்டுப் புரை...........=அன்ன சத்திரம்
ஊதியம்......................=இலாபம்
ஊமையா மொழி..=அஜபாமந்திரம்
ஒப்புரவு......................=உபகாரம்
ஓசுநன்........................=மாலுமி
ஓமாலிகை................=வாசனைச் சரக்கு
ஓரை............................=இராசி / இலக்கணம்
ஓலக்கம்.....................=தர்பார்
கண்ணெச்சில்..........=கண் திருஷ்டி
கரிசு..............................=பாவம்
கருவூலம்..................=பொக்கிஷ சாலை
கழுவாய்.....................=பிராயச் சித்தம்
காரி...............................=சனி
குடும்பு.........................=WARD
கூலம்...........................=தானியம்
கூற்றம்........................=தாலுக்கா
கூற்றுவன்..................=எமன்
கேள்வி.........................=விசாரணை
கையடை.....................=TRUST
கையூட்டு.....................=இலஞ்சம்
கோட்டம்......................=ஜில்லா
கோள்............................=கிரகம்
சமன்.............................=மத்திபம்
சலக்கரணை..............=சௌகரியம்
சார்ச்சி வழக்கு.........=உபசார வழக்கு
சால்வு..........................=திருப்தி
சாறு..............................=ரசம்
சிற்றூர்........................=கிராமம்
சுவைஞன்..................=ரசிகன்
தடுமம்.........................=ஜலதோஷம்
தவப்பழி................... =உண்ணாநோன்பு
தாழ்சீலை..................=இலங்கோடு
திணைக்களம்..........=DEPARTMENT
திருமுழுக்கு............=அபிஷேகம்
திருவிழா...................=உற்சவம்
துய்ப்பு.........................=அனுபவம்
தேற்றம்.....................=நிச்சயம்
நட்டாமுட்டி.............=LAYMAN
நரல்.............................=ஜனம்
நாண்மீன்...................=நட்சத்திரம்
நாளங்காடி................=பகற்கடைத் தெரு
நீர்ச்சீலை...................=.கோவணம்
நுகர்ச்சி.......................=அனுபோகம்
நெஞ்சாங்குலை......=இருதயம்
படமாடம்....................=கூடாரம்
பண்டுவம்...................=சிகிச்சை
பலகணி.......................=ஜன்னல்
பற்றுச்சீட்டு................=ரசீது
பிறங்கடை..................=வாரிசு
புரவுவரி........................=REVENUE
புலம்பன்.......................=ஆன்மா
பெண்டு..........................=ஸ்திரீ
பொருநன்......................=சிப்பாய்
பொருள்.........................=அர்த்தம்
மதங்கம்.........................=மிருதங்கம்
மதவலி..........................=சாண்டோ
மருத்துவன்.................=வைத்தியன்
மருப்பு............................=தந்தம்
மழம்..............................=வீரம்
மழவன்..........................=வீரன்
மறை..............................=வேதம்
மன்பதை.......................=சமுதாயம்
மீகாமன்.........................=மாலுமி
முடிசூட்டு......................=மகுடாபிஷேகம்
மெய்ப்பாடு....................=பாவம்
மெய்ப்பித்தல்..............=ருசுப்படுத்தல்
மெலிவு..........................=மந்தரம்
வலவன்.........................=சாரதி
வலிவு.............................=தாரம்
வழக்காரம்...................=பிராது
வழிபடுதல்..................=ஆராதித்தல்
வழுவாய்.....................=பாவம்
வாய்வாளாமை........=மௌனம்
விசி................................=பெஞ்ச்
விடாப்பிடி..................=வைராக்கியம்
வியப்பு.........................=ஆச்சரியம்
விழிப்பு.........................=ஜாக்கிரதை
வீடு................................=மோட்சம்
வேளாண்மை...........=உபச்சாரம்
=====================================
நன்றி: முகநூல் தமிழ்ப் பணி மன்றம் - Vaidyanathan Vedarethinam

எழுதியவர் : Vaidyanathan Vedarethinam (27-Feb-16, 12:01 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 345

மேலே