தோற்றுப் போகிறேன்

தோல்வி
ஒன்றன் பின் ஒன்றாக
என்னை தோற்கடித்துக் கொண்டிருந்தது
எடுத்து வைக்கும் ஓரோர் அடியிலும்
தோல்வியின் படிகளை முத்தமிட்ட பாதங்கள் சோர்ந்துப் போக
இன்னும் கொஞ்சம் தூரம் சென்று
தோல்வியின் விளிம்பை எட்டிப் பிடித்தால் என்னவென்ற ஆவல்
ஒருவேளை வெற்றியின் கீற்றுகளில்
ஒன்றையேனும் கைபற்றக்கூடும்

எழுதியவர் : பிரத்யுக்ஷா பிரஜோத் (29-Feb-16, 4:54 pm)
Tanglish : thotrup pokiren
பார்வை : 127

மேலே