ennavanukku
எனக்கு மட்டும் வானம்
சிவப்பு நிறமாய் தெரிகிறது..
உனக்கு பிடித்த நிறம்
சிவப்பு என்பதால்..
கண் பார்வையில் என்
மனதை செதுக்கி உன்
உருவத்தை பதித்து சென்று விட்டாய்..
குடைக்குள் மழை என
என் இமைக்குள் கண்ணீரை
தந்தவன் நீ தானே..
துறுதுறு உன் விழிகள்
தினம் தினம் என்முன்
மீண்டும் மீண்டும் மலருதடா..
இடைவெளி விட்டு அவனை
ரசி என என் இரு விழிகளும்
என்னை கெஞ்சுதடா..
எனக்குள் எவனும் இல்லை என
கர்வம் கொண்டேன்..
கர்வத்தை காற்றில் பறக்க விட்டு
என்னில் உன்னை பதித்தாயடா..
தேடுகிறேன் உன்னை..
என் இதயம் என்னும் கூட்டில் அடைக்க..
அன்புடன்
காதலியாக துடிக்கும் என் இதயம்...