நானும் இந்நாட்டு மன்ன ன்

நான் கருவறையின் இருள்ளின்று மண் உலகின் ஒளி கண்டு முன்று நாளே ஆயின..
சூழல் அறியா யவன ராணி நான் சுந்தர உலகை சுற்றி சுற்றி பார்க்கிறேன் .
இரு ஐந்து திங்கள் சுமந்து பெற்ற தாயின் மடியில் சொகுசாய் தவழ்கிறேன்
நான் அன்னை உந்தன் மடி சாய்ந்து கிடந்திட நித்தம் நித்தம் ஏங்குகிறேனே

என் மீது முத்து முத்தாய் நீர் துளிகள் நான் அண்ணாது பார்க்கிறேன் அழுத விழிகளோடு என் அன்னை. என்னுடைய பூவுலக அவதாரம் என் அன்னைக்கு துயர் தந்ததோ ?

தன்நான் அவன் இல்லை அவள் என்றதும் ஆவேசமாய் குதித்தானே என் தகப்பன் - அந்த துயரோ

தன் ஆருயிரை இந்த பொல்லா குடும்பத்தின்று எப்படி காப்போம் என்ற அந்த துயரோ
பெண் குழந்தை வேண்டாம் என்ற
உறவுகளின் வஞ்சக தீ தான் தான் வாழ்வதை விட
விழுந்து சாவதே மேல் என்று அன்னையை கண்ணீர் விட வைத்ததோ
எப்படி யார் யார் என்ன சொன்னாலும் பெண்ணாய் பிறந்திட்டு பெண்மகளை வெறுக்க மனம் வருமா? பெற்றவளூக்கு?
கார் இருளில் ஒரு கிழவி காட் டா றை என் தாய் அருகில் வந்தாள்.
அடிப்பாவி மூன்றவதும் பொட்டையாமே , கொடு அந்த சனியனை இப்போதே முடிக்கிறேன். அதன் கதையை. ஆவேசமாய் பறித்தாள் அன்னை இடமிருந்து
வந்தவள் யாரோ! இந்த வையம் அறியட்டுமே என் தகப்பனின் தாய்யாம். ஆம் அவளும் ஒரு தாய்யாம்.

உறைந்து போனாள் என் அன்னை கெஞ்சினாள் , கூத்தாடினாள் வந்தவள் போவாளா
வழி பார்த்து
வசவு பல பேசி உன்னை வாழ விட்டேனா பார் - சபதம் பூண்டு மறைந் தாள் சாகசகாரி.
மாலை கதிரவன் மேற்கே இறங்க சரக்கேற்றி தள்ளாடி தள்ளாடி வந்தான் தகப்பன்
வந்தவன் தனியாக வரவில்லை தரகனோடு வந்தான்.
அடியே பாரதி இதை கொடு. அடுத்த பத்தே திங்களில் பாங்காய் ஒரு இளவரசன் வந்திடுவான் . ஆண்மை திமிரோடு . உளறினான் கயவன்.
போதையிலும் அங்கேயே அடுத்த வாரிசுக்கு அஸ்திவாரம் போட்டான் அற்பன்.
இப்படியே சொல்லி சொல்லி ஒரு இளவரசன் வரவிற்காக மூன்று இளவரசிகளை தொலைத்து விட்டிரே அழுது புரண்டாள் , மன்றாடினாள் மடைச்சி.
அவள் கதற ,நான் கதற ,அவன் பிடுங்க என்னை அவள்தனில் பிரித்திட்டு
ஓடினான் கொடியவன்.
பட்டுத்தி, பால் சோறு உண்டு பஞ்சனனையில் படுத்துறங்கி பாங்காய் வலம் வருவேன்
என கற்பனையில் கருவறையில் காத்திருந்த நான்
பூஉலகில் கை மாறி மூவாய்ரத்திற்கு விலை போணேன் .

வந்த இல்லத்தில் பத்தோடு ஒன்றாக இன்னாட்டு மன்னனாக கலந்துவிட்டேன் .
எனக்கு பசிக்கு தாய் பால் இல்லை ஆனால் boodi பால் உண்டு
பால் ஊட்ட தாய் இல்லை ஆனால் தாய்மை நிறைந்த சகோதரிகள் உண்டு.
மறுநாளே நான் வெள்ளை துணியில் சுற்றப்பட்டு சுட்எரிக்கும் வெயிலில் உலா வரும் ஒளி கதிராக வியாபாரத்திற்கு புறப்பட்டு விட்டேன்
அனுதினமும் அண்ணா சாலையில் மகாராணி யாக வலம் வருகிறேன்.
இந்த பாவப்பட்ட ஜென்மத்தின் மேல் தான் எத்தனை பரிதாப பார்வைகள்?
சில்லரையும் சிக்கென சேர்ந்தது என்னை வாங்கிய வனுக்கு .
கண் கூசும் பொய்களின் வெளிச்சதை விட அன்னையின் கருவறையே மேலானது. இன்னும் கூட ஒரு பத்து திங்கள் அங்கேய தங்கி இருந்திருக்கலாமே
உதிரம் பிரிந்து வெளி வருவேன் என்று உற்று நோக்கி பத்து திங்கள் காத்திருந்து பெற்று எடுத்து பின் பறி கொடுத்த என் தாயிக்கு யார் ஆறுதல் சொல்வார்?

இறைவா | எனக்கு ஒரு வரம் கொடு என்னை மீண்டும் என் தாயின் கருவறைக்குள் சேரத்துவிடு. நானே அறுதல் சொல்கிறேன் அன்னைக்கு.

ஆண்ணுக்கு பெண் சமம் சரி தானா? இந்த பிஞ்சு கேட்கிறேன். சொல் சமுதாயமே!

எழுதியவர் : (1-Mar-16, 3:51 pm)
பார்வை : 76

மேலே