வாழ்வை சுகமாக்கும் இன்டர்நெட்
நெட் என்றால்
சேர்க்கும் கருவி
இதனுள் உள்ளது
பயனுள்ள அருவி
வழியும் வலியும்
உள்ளது வாழ்க்கை -நல்
வழியில் சென்றால்
இனித்திடும் யாக்கை.
அல்லது கொள்ளின்
வலிதான் மிஞ்சும் .
வருட கணக்கில்
சீரியல்களில்
சிக்கி
நாட்கணக்கில்
கிரிக்கெட்டில்
மூழ்கி
இவையெல்லாம்
வாழ்க்கையின்
வசந்த படிகளா?
சுவைக்க, அறிவை
வளர்க்க
ஆயிரம் உள்ளபோது
வலியை சுவைக்க
விளைவது ஏனோ ?
வாழ்க்கை கல்வி
எதிலும் உள்ளது
நம் பார்வையில் தானே
பதிலும் உள்ளது.