அக்கா
அன்பானவள் தான்
அக்கா.
அன்னைக்கு
அடுத்தவள்.
புகுந்த வீடு
செல்லும்வரை.
தந்தை யுடன்
கருத்துரைத்தும்
தம்பி தங்கைக்காய்
பரிந்துரைத்தும்
எதையும்
தாங்கித்தான்
செல்வாள் .
அடுத்த வீட்டுக்கு
காவலாவதால்
அக்காவானாளா?.
பின்னர் அவளும்
அம்மாவாகி
பாட்டியாகி-ஹும்
தொடர் கதையாய்!!