நம் காதலை நினைத்து நீ கண்ணீர்விடாதே 555

உயிரானவளே...
எனக்குள் உன்மீது
இருந்த காதலையும்...
உனக்குள் என்மீது
இருந்த காதலையும்...
சொல்லாமலே நாம்
வாழ்ந்தோம் இருவரும்...
சில தருணங்கள் எனக்கும் உனக்கும்
இருக்கும் காதலை உணர்த்தியது...
விழிகளோடு விழிகள் நோக்க இருவரும்
பரிமாரிகொள்ளவில்லை நம்காதலை...
நீ வந்து சொன்னாய் உனக்கு
திருமணம் என்று...
அழைபிதழ் கொடுக்க மறுத்துவிட்டாய்
என்னிடம் விழிகளில் கண்ணீர்மல்க...
அன்று முதல் என்னை நீயும்
உன்னை நானும் பார்த்ததில்லை...
இன்று உன்னை சந்தித்தேன்
கையில் மழலையுடன்...
என்பெயரின் சாயலில் உன் மழலைக்கு
ஏனடி பெயர் வைத்தாய்...
வெளிபடுத்தாத நம் காதலை
நினைத்து நீ கண்ணீர்விடாதே...
அமைந்த உன் வாழ்க்கையை
வசந்தமாக்கிகொள்...
உன் நலம் விரும்பும்
உன் பிரியமானவன்.....