மீசைக்கார அப்பா

மீசைக்கார அப்பா...

என் கையைப்பிடித்து நடத்தி சென்றாயே,
எங்கே உன் காய்த்துபோன கரங்கள்...
என்னை தோள்மேலே தூக்கி செல்வாயே,
எங்கே உன் பெரிய தோள்கள்...
கோவத்திலும் என்னைக்கண்டால் புன்னகைப்பாயே,
எங்கே உன் கபடமில்லா புன்னகை...
மீசையை அடிக்கடி முறுக்கி விடுவாயே,
எங்கே உன் முறுக்கு மீசை...
மது அருந்தினாலும் எனக்கு வாங்கி வருவாயே,
எங்கே உன் ஆரஞ்சு மிட்டாய் ...
சாப்பிடும்போது தினமும் கொடுப்பாயே,
எங்கே உன் பிடி சோறு...
நான் அழுதால் அம்மாவை திட்டித்தீர்ப்பாயே,
எங்கே உன் கோவப்பேச்சு...

இன்னொரு முறை உன் மகளாக பிறக்க வேண்டும்,
அப்பா அப்பா என்று ஆயிரம் முறை அழைக்க...

எழுதியவர் : ரானா சிங் M (2-Mar-16, 8:39 pm)
சேர்த்தது : ரானா சிங் M
பார்வை : 78

மேலே