சலாவு 55 கவிதைகள்
அம்மா,
கருவுக்குள் எனை வைத்து ..
உயிருக்கு உரு கொடுத்தாய் ..
பத்து மாசம் எனை சுமந்து ..
பிள்ளையாக்கி பெற்றெடுத்தாய் ..
பசிக்கு தாய் பாலுட்டி ..
சேய் பாசத்தில் சீராட்டி ..
நடை பயிலும் கால்களுக்கு ..
உன் கையே ஊன்று கோலாம் ..
பிணி துன்பம் பிடிக்குமேன்று ..
பேணி காத்து உன் ..
தூக்கத்தினை தொலைத்தாயம்மா ..
கொட்டும் மழையில் ..
நாம் நடந்து வர உன் சேலையை ..
குடையாக்கி காத்தாயம்மா ..
கடுங்குளிரில் நான் நடுங்க ..
உன் உடல் வெப்பதினில் ..
எனை அணைத்தாய்..
மூத்த பிள்ளை நானாக ..
முதலாம் முத்து என்று ..
பெயர் சூட்டி அழகு பார்த்தாய் ..
இப்புவியில் உனை புகழ ..
வார்த்தைகள் எது ..
வார்த்தைகளில் புகழ்ந்தால் ..
அது உனக்கு மிகையாகா ..
ஆண்டவனின் வேதத்திலே ..
அவன் ஆசி மொழி கூறுகிறான் ..
உன் பாதத்திலே சொர்க்கமென்று .
இனியொரு ஜென்மமிருந்தால் ..
எனை சுமந்தவளை நான் சுமக்க ..
பிறந்திடுவேன் செருப்பாக..
உன் பாதத்தினில் உனை சுமக்க ..
........
......................சலா,