உன்னையே ஊன்றிப்படி

உன்னையே ஊன்றிப் படித்தால்
தன்மையே ஓங்கி வளரும்
வன்மையைப் பேச்சில் தவிர்த்தால்
அன்பையே உள்ளம் அடையும்..!

நன்மையே நாளும் நினைத்தால்
புன்மையும் ஓடி ஒழியும்
தன்னையே அடக்கி ஆண்டால் 
பொன்னென மதிப்பும் உயரும்..!

என்றுமே ஏற்றம் நினைத்தால்
நன்றாய் வாழ்வும் அமையும்
நன்றியை மறவா எண்ணம்
என்றுமே வாழ்வில் வேண்டும்!

எழுதியவர் : விஜயகுமார் வேல்முருகன் (6-Mar-16, 8:15 am)
பார்வை : 114

மேலே