உதவாத உறவுகள்
உறவென்றால் ஒன்றா இரண்டா
யாரிடந்தான் அடுக்கிச் சொல்வேன் .
மறவாது மனிதம் காக்கும்
மட்டில்லா மனிதர்களே உறவென்பேன் .
உதவாத உறவுகள் இருந்தென்ன இலாபம்?
திருந்தாத சொந்தங்கள் சுமைகள் தானே .
வருந்தாத வாழ்க்கையில் வருகின்ற உறவுகள்
வருந்துகின்ற வாழ்க்கைக்கு வருவதுமில்லை .
துன்பத்தில் நில்லாத உறவுகளும்
இன்பத்தில் பங்குகொள்ள வருதல்வேண்டா .
வம்பாக பேசுகின்ற உறவுதன்னில்
வளமான வாழ்வுநெறி கிடைப்பதில்லை .
அன்புக்கு ஏங்குகின்ற சமுதாயத்தில்
அடிதடிக்கு இறங்குகின்ற உறவுகளே
இன்றைக்கு உள்ளதேன்பேன் .
இத்தனையும் உதவாத உறவுகள் .
காசினைப் பெரிதாக மதிக்கும்
கள்ளர்கள் கூட்டமாய் நிற்கின்ற
பாசமிலா உறவுகளே இன்று
பகல்வேசம் காட்டுகின்ற உதவா உறவுகள் .
வாய்ப்பேச்சினில் மட்டுமே உறவாடி
வகையாக செல்வத்தை சூறையாடும்
உணர்வில்லா உறவுகளே இற்றைநாளில்
உதவாத உறவுகளாம் என்பேன் நானே .
மதிக்காத உறவுகளும் மாசான
உறவுகளும் நாமும் மதிக்காது நின்றிடுவோம்
மண்ணுலகில் இவைகளெல்லாம்
உதவாத உறவுகளே ! உதவாத உறவுகளே !
பாசத்தைக் காட்டிடுவார் காசின்மேலே .
பங்கிட்டு கொள்வாராம் சொத்தைநாடி .
சொந்தம் பாரா உறவுகள் அனைத்தும்
உதவாத உறவுகளே ! உதவாத உறவுகளே !