தினம் ஒரு காதல் தாலாட்டு - பாடல்- 27

சுடிதாரு மாட்டிக்கிட்டு சிங்கார கன்னுக்குட்டி
எக்ஸ்ப்போட்டு வேலைக்கு சொகுசாகப் போறாளாம்
சொகுசாகப் போறவள நைசாக நான் பாத்தேன்
நைசாக பாத்த என்னை, ஒரு சைசாக கண்ணடிச்சாலாம்..!

மாசம் மூவாயிரம் சம்பளத்துக்கே
தினம் மூணு டிரஸ்சு மாத்துறவ
என்னைப்போல ஏழாயிரம் சம்பாதிச்சா
எத்தனை டிரஸ்சு மாத்துவாளோ…?

மூவாயிரத்தில் ஓராயிரம்
மாநகர பேருந்துக்கேப் போகுது
ஈராயிரத்தில் ஓராயிரம்
மேனி மேக்கப்புக்கு செலவாகுது
இருக்கும் ஓராயிரத்தை அவ ஆத்தா புடுங்கனா
அவசர செலவுக்கு அவ என்ன பண்ணுவாளாம்..?

காலையில அஞ்சுமணி,
எந்திரிக்கும் சின்னமணி
விஸ்த்தாரமா வாசலிலே
முத்தார கோலம் போடுவாளாம்..!

ஆகுது ஆறுமணி
அவசரமா மேக்கப்பண்ணி
டிபன் பாக்ஸ சுமந்துக்கிட்டு
பஸ் ஸ்டாப்புக்கு வருவாளாம்

பஸ் வர்றது ஏழுமணி
பாவை ஏறுவா என்னை முந்தி
பாலவாக்கம் வந்தவுடனே
சட்டுன்னு எறங்கி கொள்வாளாம்

வேலை ஆரம்பம் எட்டுமணி
வேர்வை சிந்தும் குட்டிமணி
ஓட்டி முடிஞ்சி ஒன்பது மணிக்கு
ஒடிஞ்சிப்போய் வீடு வருவாளாம்

படுப்பது பத்துமணி – அன்று
பட்ட கஷ்ட்டத்தை எண்ணியெண்ணி
பரலோகம் போவதுபோல் குறட்டை விடுவாளாம்.!

எழுதியவர் : சாய்மாறன் (7-Mar-16, 1:21 pm)
பார்வை : 78

மேலே