உன்னால் முடியும் பெண்ணே

காலையில் எழுந்தவள் கதவு திறந்திருப்பதை பார்த்து திகைத்தாள்...

என்ன இது அம்மா எழுந்தாச்சா...கதவு திறந்திருக்கு வாசலில் கோலமும்
போட்டிருக்கு அம்மாவைக் காணோமே... என்று யோசித்தவாறு அடுக்களைக்கு
சென்று வேலைகளில் மும்முறமானாள்....

அப்போது அலைபேசி அடிக்கவும்.. எடுத்து காதுக்கு கொடுத்தவள்...

"சார்....எஸ்...சார்...எஸ்...சார்...ஷார்ப்பா..கரெக்ட்டா வந்தர்றேன் சார்",
என்று அலைபேசியை கட் செய்தாள்...

அதற்குள் அம்மா வந்துவிட ....

"அம்மா என்னம்மா இது எங்க போன...? சொல்லாமகூட.... என்று பொய்கோபம் கொண்டாள்..."

"நான் எங்கம்மா போகப்போறேன்...கோவிலுக்குதான்... இன்னைக்கி முதன்முதலா வேலையில சேரப்போற... அதான் கோவிலுக்கு போய் அர்ச்சனை பண்ணிட்டு வந்தேன்... ஏம்மா இந்த வேலைக்கு நீ போய்தான் ஆகணுமா?" என்று கேட்க...

"என்னம்மா இது... நீதானே ஆசைப்பட்ட... உன்னோட ஆசை மட்டுமில்ல‌
என்னோட ஆசையும் இதுதான்.... கண்டிப்பா இன்னைக்கி டியூட்டில‌
ஜாயின் பண்ணனும் ...இப்போதான் போன் வந்துச்சி நான் கொஞ்சம்
சீக்கிரமாவே கிளம்புறேன்மா...."

"அம்மாடி பார்த்தும்மா....பத்திரம்மா நீ... எல்லாரையும் வச்சு..."

"அச்சச்சோ.... அம்மா கவலையே படாதிங்க.... நல்லா ட்ரெயினிங்
எடுத்திருக்கேன்....", என்று சொல்லிவிட்டு உடைமாற்ற உள்ளே செல்ல கடவுளிடம் வேண்டிக்கொண்டாள் அம்மா....

கடவுளே முதன் முதலா மகள் ட்ரெயின் ஓட்டச் செல்கிறாள்
நீ தான் கூடவே இருந்து காப்பாற்றவேண்டும் என்று....

அடுத்த நாள் முழுதும் எல்லா செய்தித்தாள்களிலும் மகளின் படத்தைப் பார்த்து பூரித்துப் போனாள் அம்மா....

அந்த செய்தி....

"சென்னை மெட்ரோவின் முதல் ட்ரைவர் ப்ரீத்திக்கு பாராட்டு மழை"

இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

எழுதியவர் : வே புனிதா வேளாங்கண்ணி (8-Mar-16, 7:58 am)
பார்வை : 641

மேலே