கண்ணீர்த் துளிகள்
நாளுக்கு நாள் அதிகரிக்கும்
நண்பர்களால் மனம் நெகிழ்ந்தேன்!
எனினும் எளிமையை ஏற்றுவாழும்
ஏழ்மையால் கண் கலங்கினேன்.
நாழியுணவு ஆடையிரண்டு பெற்று
நல்வாழ்வு வாழ்ந்து வருகிறேன்!
எனினும் பருக்கையை எண்ணும்
ஏழைகளைக் கண்டு வருந்தினேன்.
நல்லறிவும் திறமையும் வாய்ந்து
நான் எனும் நிலையடைந்தேன்!
எனினும் அருந்திறனையுடை ஏழைகளின்
இயலாத் தனத்தால் கவலையடைந்தேன்.
இளமையில் கிடைத்து வரும்
கல்வியால் சிறப்ப டைந்தேன்!
எனினும் கல்லாமல் வாழும்
எளியோரைக் கண்டு மனமுடைந்தேன்.
ஆயக் கலைகள்பல கற்று
அருமை நிலை பெற்றேன்!
எனினும் தெருவில் மட்டைப்பந்தாடும்
எளியவரின் திறமையைக் காணவிட்டேன்.
வருந்துகிறேன்! வருந்துகிறேன்! கண்ணீர்
பெருக்குகிறேன்! பெருக்குகிறேன்!
வேண்டுகிறேன்! வேண்டுகிறேன்! ஆர்வத்தைத்
தூண்டுகிறேன்! தூண்டுகிறேன்!