இளங்காத்து வீசுதே

( இளங்காத்து வீசுதே பாடல் மெட்டில் எழுதப்பட்ட வரிகள் . . . . )

இளவெனி காலந்தா இதமா இலைகள் ஆடுது
பூக்கள் இதழ்கள் விரிக்குது சுகமாய் இதயம் குளிருது
இசையாய் தென்றல் பேசுது ...

குருவி பாடம் படிச்சுசா மின்கள் நீந்த பயிலுச்சா
எல்லாம் இயற்க்கை ஓவியம் மனித நீயும் இயற்கைதான்
சாமி கண்ண மூடல நீயும் கண்ண தொறந்து பார்
இறைவன் இயற்க்கை தானடா .....

குழந்தை சத்தம் கேட்டால் தாயும் பாலை வூட்டுவாள்
தாய்மை போல மானம் என்றும் கருணை காட்டுமே ...

சின்ன சின்ன சின்ன குயில் கூட கொஞ்சி கொஞ்சி இசபாடும்
குரல்வளையில் சுவரங்கள் இருக்கா குயிலுக்குள்ளே குழல் தான் இருக்கா

துளி துளி துளி மேகம்தான் கண்ணீர்சிந்தும் அந்த வானம் தான்
சிந்தும் நீரோ உனக்குத்தானே என் நதி நீரை அடகு வைத்தாய்

பூவின் வாசத்தை போல நீயும் வாழ்ந்திடு
அன்பே வாழ்க்கையின் சொர்க்கம் அன்பை விதைத்துகொள்
மனசு விரியட்டும் மகிழ்ச்சி பிறக்கட்டும் இன்பம் வந்து வாழ்த்து பாட ..

காதல் நெஞ்சுக்குள்ள வந்தாலே கண்ணின் பார்வைப்போகும் தன்னாலே
கண்கள் ரெண்டும் கனவில் மிதக்கும் மெளனங்களும் கவிதை படிக்கும்

உன்னை தொடரும் உன் நிழல் போல உன்னை தொடரும் அந்த பிறை கூட
உன் எண்ணப்படி தான் வண்ணம் இருக்கும் உன் பார்வைக்கெற்றே வளையும் இயற்க்கை

சாரல் ராகத்தை பாட ஜன்னல் நடனத்தை ஆட
தூரல் முத்தத்தை கொட்ட மண்ணும் சிலிர்ப்பதை பாரு

இருப்பதை வைத்து இன்பம் அனுபவி
இருக்குற வரைக்கும் வாழ்க்கை இனிக்கட்டும் இயற்கையோட ........

எழுதியவர் : கவி தமிழ் Nishanth (9-Mar-16, 1:59 pm)
பார்வை : 208

மேலே