பலிக்கடா

துருப்பிடித்த
துப்பாக்கிகள்
தூசு தட்டப்பட்டன
மேற்குலகில்


மேகக்கூட்டங்கள்
மின்னல் கீற்றுகளால்
கிழித்தெறியப்பட்டன
கீழைத் தேயத்தில்


பூகோள அரசியல்
பூகம்பத்தின் புகைகள்
கசிந்து பரவியதால்
கண்ணீரில் கரைகிறது
கடைசி உலகம்


கண் கட்டி
விளையாட்டு;களில்
கலைக்கப் பட்ட மனிதர்கள்
சிதறிய சாம்பல்களாய்
தெருக்களில் அங்கும் இங்கும்


ஓயாத பூகம்பம் தீயாக மாறி
தேசமெல்லாம் எரிகையிலே
தெருவோர மக்களை
தத்தெடுக்க யார் உண்டு?


திடுக்கிட்ட மேற்குலகம்
தேடுகிறது வேறு வழி

எழுதியவர் : சர்மிலா (9-Mar-16, 4:32 pm)
சேர்த்தது : சர்மிலா வினோதினி
பார்வை : 101

மேலே