அவன் எண்ணங்கள்
அவன் இறங்க அவன்
எண்ணங்கள் ஏறுகின்றன
அவன் தூங்க அவன்
எண்ணங்கள் பறக்கின்றன
அவன் வாழ அவன்
எண்ணங்கள் ஏங்குகின்றன
அவன் ஆள அவன்
எண்ணங்கள் வியக்கின்றன
அவன் உயர அவன்
எண்ணங்கள் உயர்த்துகின்றன
அவன் விரும்ப அவன்
எண்ணங்கள் அரும்புகின்றன
அவன் கொடுக்க அவன்
எண்ணங்கள் தித்திக்கின்றன
அவன் வாழ்த்த அவன்
எண்ணங்கள் நிறைகின்றன