மனிதம் மாண்டதடா

கலங்காதே என் தோழா...!
காலம் பதில் சொல்லும் ஒருநாள்....
இருட்டு உலகமிதில்
தவறிப் பிறந்துவிட்டாய் -இதில்
இறக்ககுணம் கொண்டோரைத்
தேடுவது கடினம்...!
பணத்திற்காக கண்டதைத் தின்னும்
கழுகுக்கூட்டமடா....!
அதை மண்ணிலே புதைத்துவைத்து
மட்டற்ற மகிழ்ச்சி கொள்ளும்
மண்தவளைக் கூட்டமடா....!!
இதயமற்ற ஈனப்பிறவிகள்
இருமாப்பில் அலையும் தேசமடா -இங்கு
அன்பில்லா அரக்க்க்கூட்டம்
உன் அடிவயிற்றில் மிதிக்குமடா....!
இதில் மதம்கொண்ட யானைகள் அதிகம்.....!
வழிதவறி சிக்கிக்கொள்ளாதே.........
உன்னை வதம் செய்தே கொன்றுவிடும்.....!!
-சதீஷ் ராம்கி.