பட்டினிக்கூடு

நெடுநாள் தேடினேன்
அன்பு எங்கு கிடைக்குமென்று......!
பின்புதான் தெறிந்துகொண்டேன்..............
அது காட்டில் கிடைக்கும்
நாட்டில் கிடைக்காதென்று....!!
பளபளக்கும் ஆடைநெய்ய
பட்டுக்கூட்டை வெட்டியெடுப்பதுபோல்....
பறிதவித்துப்போகிறது பட்டினிக்கூட்டில்
எங்கள் உடல்....!
வாசலுக்கு பூட்டை செய்த அறிவாளிகளே......
வயிற்றிற்கும் ஒரு பூட்டை செய்யுங்கள்
வரலாறு உங்கள் பெயரைச் சொல்லும்......!
ஏழை ஜாதி நீங்களென்று எம்மை
எட்டி உதைக்காமல்........
உம் அன்புக்கரம் நீட்டி
எம்மை அறவனைத்துப் பாருங்கள்......!
எட்டிப் பிடிக்கவரும்
எமன்கூட எட்டடி தூரம் செல்வான்......
உம்மை எடுத்துச்சென்றால் பாவமென்று....!!
-சதீஷ் ராம்கி.