குழந்தைகள் கவிதைகள்


பூக்களில் வாசம்
பூக்களும் வாசம்

விடியலில் வெளிச்சம்
விடியலும் வெளிச்சம்

காற்றில் சுவாசம்
காற்றும் சுவாசம்

நீர்த் துளிகள்
நதி

நதிகள் கலவை
கடல்

கனவுகளில் ஆசைகள்
ஆசைகளும் கனவுகள்

வீதி வழி
நடை பயிலும்
பாதங்கள்

பாதங்களைத்
தடம் தொடரும்
சுவடுகள்

சிட்டுக் குருவிகளில்
சங்கீதம்
சிரிக்கிறது

புல்லாங்குழலுக்குள்
பூக்களும் வெடிக்கிறது

நேரம் தானே காலம்
காலம் தான் பருவம்

பருவங்களில்
பயிர் செய்யப் படுகிறது

மழை தான்
பருவங்களையும்
விதைக்கிறது

சுட்டிக் குழந்தைகளில்
குட்டிக் கவிதைகள்

துரு துரு மழலைகளில்
வசீகர ஹைக்கூகள்

கொழு கொழு
பிள்ளைகள்
விழிகளின்
செல்லத் துணுக்குகள்

மொத்தத்தில்
குழந்தைகள்

மனசு ரசிக்கும்
மரபுக்
கவிதைகள்...

எழுதியவர் : அன்புபாலா (16-Jun-11, 7:48 pm)
பார்வை : 1946

மேலே