அன்னையே சரணம் (lingaashtagam mettu)

அம்மா உந்தன் மலரடி பற்றி
அனுதினம் போற்றிடும் எங்களைக் காப்பாய்
அடைக்கலம் உனையன்றி வேறில்லை தாயே
அருள்தன் தெங்களை காத்தருள்வாயே
பாக்கள் பல கொண்டு பண் இசைத்திடுவேன்
பூக்கும் புன்னகையே பூத்தருள் புரிவாய்
தீர்க்கும் பல நோய் உன் மலர்க் கண்கள்
யார்க்கும் என்றென்றும் துணை செய்வாயே
சங்கடம் தீர்த்தே சடுதியில் வருவாய்
பங்கஜ கண்ணால் பார்த்தருள் புரிவாய்
அங்கம் உருகிடப் பாடிப் பணிவோம்
தங்கமே நீயே தயங்காமல் அருள்வாய்
தஞ்சம் உன்திரு பாத கமலங்கள் '
நெஞ்சம் குளிர்விக்கும் உன் திரு நாமம்
கெஞ்சும் அடியார் வினை தீர்க்கும் மலர் கண்கள்
அஞ்சல் எனக் கூறும் உன்னபயக் கரங்கள்
உண்மையாம் உன்னை உள்ளம் குளிர்ந்த்திட
பண்ணிசைத்தென்றும் பாடிடும் அடியார்
கண்ணென விளங்கும் கருணையின் வடிவே
தண்ணளிக் காட்டி தயை செய்திடுவாயே
சந்ததம் உன்னைப் பாடிப் பரவுவேன்
என்தனைக் காத்தே இன்னருள் புரிவாய்
வந்தனைக் கூறி வழிபடுவோர்தம்
பந்தம் அகற்றி நற்பேற்றினை அருள்வாய்
மென்மை மனம்கொண்ட மேதகுத் திருவே
தன்னலம் கருதா தனிப்பெரும் உருவே
பொன்னடிப் போற்றிப் பரவிடும் அன்பர்
இன்னல்கள் நீக்கும் எழில் உரு வடிவே
வெற்றித் திருவே விரைந்திங்கு வருவாய்
பற்றித் தொழுவேன் உன் மலர்ப் பாதம்
நற்றமிழால் உன்னை நான் துடிப் பாட
பெற்றவளே நீ மனம் கனிந்திடுவாய்
என்னைப் பெற்றவளே நீ மனம் கனிந்திடுவாய் .