ரோசாப்பூ உதட்டு தேவதை நீ

என் ரோசாப்பூ உதட்டு தேவதை நீ
சாலையோரம் நடந்து போகையில்
தாரிட்ட சாலையில் புல்முளைக்குது-
பட்டமரமும் பூக்கள் பூக்குது...
மாலைநேர தென்றல் மயங்கி -உன்
காலை வருடி மகிழ்ந்து செல்லுது...
காதைதொட்டு காதல் சொல்லுது...
வாட்டும் வெயிலை குளிரால் விரட்டிட-உன்
வட்டமுகம்போன்ற நிலவெழும் வேளையிலே
சட்டென்று தன்னிலை மாற்றி-நீ பார்த்திட
வானவில்லோடு வரவேற்குது வானம்...
குருதியில் மையெடுத்து கவியெழுதும் காதலனாய்
சடுதியில் காற்றடிக்க சாரல் மழையனுப்பி
தொட்டு நனைக்குது வானம்-காதல்
சொல்ல நிலைக்குது தானும்...
கட்டுப்பாடு இல்லாத பட்டாம்பூச்சியாய்
வட்டப்பாதை விட்ட செயற்கைகோளாய்-வெளிக்
கூட்டில் வட்டமிடும் எலக்ட்ரானய்
எல்லைகள் உடைத்து இடம்பெயர்ந்து
உனக்காய் துடிக்கிறதென் இதயம்...
ஆயிரம் தேவதை ஒன்றாய்பார்த்து
பாயிரம் மறந்த பாவலனாய்-உன்முன்
வார்த்தை வற்றிபோய் ஆதிமொழியாம்
பார்வையாலே காதல்சொல்லி நிற்கிறேன்...

முயல்போன்ற குட்டி பெண்ணே நீ
மான்போல துள்ளி போனதில்
மூவர் எங்களுக்குள்
மூள்கிறதே மூன்றாம் உலகப்போர்....!
குழந்தையாய் குதித்து
தேவதையாய் சிரித்து
கிளிபோல் கொஞ்சி
குயில்போல் பேசி
பட்டமாய் பறந்து என்
நெஞ்சில் நிறைந்த
சுதந்திர காற்றே...!
வெற்றியோ தோல்வியோ
நிழலாய் உனைதொடர்வேன்
நினைவிருக்கும் வரை..!
வெறுத்தாலும் வெற்றிதான் எனக்கு
அப்படியேனும்
எனைநீ நினைப்பாயேனால்....!

எழுதியவர் : காசி. தங்கராசு (14-Mar-16, 2:25 am)
பார்வை : 180

மேலே