விவசாயி
கடன் பட்டார் நெஞ்சம் போல்
கலங்கினார்கள் .....
உழுதவன் கணக்கு
பார்த்து ....
உலக்கு கூட மிஞ்சவில்லை ...
தள்ளுபடி ஆடியில் ஆடைக்கு
மட்டும் தானா ....
விவசாயிகளுக்கு இல்லையா ?
ஆடியில் காத்தடிச்சா
ஐப்பசியில் தானே மழை
வாங்கிய கடன்
வங்கிகடன் என்று அரசுக்கு
தெரியாதா ?
திப்பி செலுத்த கடைசி தேதி
என்று ..
எழுதப்பட்டதன் அருகில்
கை நாட்டு
வைத்து திரும்பும் விவசாயிக்கு
உள் நாட்டு அரசு
செய்தது என்ன?
விலை நிர்ணயமா .......?
விலை நிர்வாணமா ....?
உழைப்பை இழந்தவன் கைபோல ஆனது ,
வெட்கப்பட வேண்டிய
ஆட்சி முறை ......
விதை விதைத்தவன்
விதை அறுக்க முடியவில்லை.....
பழமொழி '''பலி மொழி''' ஆகிப்போனது
'''''' விவசாயி தற்கொலை ''''
எள்ளு போட்டு எள்ளும் முளைக்கவில்லை
நெல்லு போட்டு நெல்லும் முளைக்கவில்லை
விளைந்த நிலம்
வரண்டநிலமானது ....
அறுவடைக்கு முன்னே
அறுபட தயாரானோம் ...
பாண்டியனின் தீர்ப்புக்கு
தலையை கொடுத்தவர்களாய்......
வங்கிகளிடமும்
வாங்கிகளிடமும் [ குண்டர்கள் ].