காளை மாடு

மனைவியை அவர் வளர்த்த காளை மாடு முட்டி கொன்றுவிட்டது. அந்த மனைவியின் இறுதிச் சடங்கின்போது அதை நடத்தி வைத்த புரோகிதர் விசித்திரமான ஒரு சம்பவத்தைக் கவனித்தார்.

துக்கம் கேட்ட பெண்கள் அந்த விவசாயியை நெருங்கி வந்து ஏதோ காதில் சொல்கிறபோது, ஒரு நிமிடம் கேட்டுவிட்டு "ஆமாம்" என்று தலை அசைத்தார். ஆனால், துக்கம் கேட்க வந்த ஆண்கள் நெருங்கிவந்து ஏதோ சொல்கிறபோது "இல்லை" என்று தலை அசைத்தார்.

அது தொடர்ந்து கொண்டே இருந்தது. எனவே இறுதிச் சடங்கெல்லாம் முடிந்த பிறகு புரோகிதர் அந்த விவசாயிடம் வந்து, "பெண்கள் வந்தால், ஆமாம் என்று தலையாட்டினிர்கள். ஆண்கள் வந்தால், இல்லை என்று தலையாட்டினிர்களே, ஏன்..?! என்று கேட்டார்.

அதற்கு அந்த விவசாயி, பெண்களெல்லாம் வந்து என் மனைவியைப் பற்றி நல்லவிதமாகச் சொன்னார்கள். "எவ்வளவு அழகாய் இருந்தார்கள், அவர்களுக்கு உதவி செய்யும் குணம் அதிகம்" என்று, அதற்கு ஆமாம் என்று நானும் தலையசைத்தேன்.

சரி ஆண்கள் வந்து கேட்டால் "இல்லை" என்று தலையசைத்தீர்களே ஏன்..?! ஒ.. அதுவா, அவர்கள் அந்த 'காளை மாட்டை விற்பனைக்குத் தர முடியுமா?" என்று கேட்டார்கள். நான் இல்லை என்று சொன்னேன் என்றார்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு முகநூல்) (25-Mar-16, 7:15 pm)
பார்வை : 235

சிறந்த நகைச்சுவைகள்

மேலே