‪சமையலறை‬

சமையலறை...
ஒரு வானவில் மாடம்
அங்கு பல வண்ண பாத்திரங்கள் புலங்கும்

இது ஒரு இசைக்கூடம்
ஒன்றோடொன்று உரசி
அவ்வப்போது தோற்றுவிக்கும்
புதுப்புது இசையை....

இது ஒரு வீட்டு வங்கி
அங்காங்கே சில பருப்புகளுக்கு அடியிலும்
அரிசிக்கு அடியிலும்
பணத்தையும் காசையும் சேர்த்து வைத்திருக்கும்...

இது ஒரு உற்பத்தி தொழிற்சாலை
தன் வாசனையால் முதலில் பசியை உற்பத்தி செய்யும்
பின் புதுப்புது பதார்த்தங்களை...
ஆசையாக உண்டபின்பு
சமைத்தோர் மீதான அன்பை...

ஏழைக்கு ஒற்றையறையே எல்லாம்...

ஒவ்வொரு வீட்டின் சமையலறையும்
விருந்தாளிகளை அதிகம் சந்திக்கும்..
அங்கே தான்
சில அம்மாக்களின், அக்காக்களின், தங்கைகளின்
அண்ணிகளின், பாட்டிகளின், மருமகள்களின்
கண்ணீரையும் மறைத்து வைத்திருக்கும்.....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (27-Mar-16, 1:18 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 858

மேலே