இனிய எதிரிக்கு

என் இனிய எதிரிக்கு - நீ
வெறுக்கும் எதிரி
வடிக்கும் வாசகங்கள் !!!!!

இன்றும் நான் உன்னை
நேசிப்பேன்
என் எதிரியாக
மட்டுமே !!!

ஏனெனில் , -நீ
துரோகியாகாமல்
இருப்பதற்கு !!!

ஏனெனில்,
எனக்கு சுய மரியாதையை
கற்று தந்ததற்கு !!!

ஏனெனில்,
என் திறமைகள்
வெளிப்பட
தூண்டியதற்கு!!!!

ஏனெனில் ,
நான் செய்யும்
தவறுகளை
அவ்வப்போது
சுட்டிக்
காண்பிப்பதற்கு !!!!

ஏனெனில்,
எனக்கான வாழ்வை
நான் வாழ கற்றுக்
கொடுத்ததற்கு!!!!!

ஏனெனில்,
என்னுடன் இருக்கும்
நண்பர்களை விட
மேலும், என்னை
நன்றாய்
கவனிப்பதற்கு !!!!!.

இன்னும்,
நான் உன்னை நேசிப்பேன்
நீ எனக்கு
துரோகியாகாதவரை!!!

எழுதியவர் : பெ. ஜான்சிராணி (29-Mar-16, 8:21 am)
பார்வை : 361

மேலே