பெண்ணிற்கான புதிய விடியல்

நவீன உலகமாம்
ஆணும் பெண்ணும் சமமாம்!!!

என்னடா பிதற்றுகிறாய்
எள்ளி நகையாட அல்லவா செய்கிறாய்!!

நிமிர்ந்து நின்றால் கர்வம் என்பீர்
தலை குனிந்தால் ஓங்கிக் குட்டுவீர்!!

பெண்கள் தம்மையே சீரழித்த கதையுண்டு
சுதந்திரத்தின் ஆழ் அர்த்தம் புரியாததால்!!

தாலிக் கட்டுமுன் பணி என்பது விருப்பம்
அதுவே பின்பு பலருக்கு ஆனது நிமித்தம்!!

சமயலறையில் வெந்த காலங்கள் போனது
இப்போது வெளியுலகமும் அவர்களை ஆட்கொண்டது!!

முன்னேற்றங்கள் வந்தால் என்ன
நவீனங்கள் வந்தால் என்ன!!

மனிதனின் எண்ணக் கதவுகள் திறக்கவில்லை
நெஞ்சில் மனித நேயமும் பிறக்கவில்லை!!

இறக்கைக் கொண்ட பெண்ணின் சுதந்திரத்தை
வெட்டிவிடவே முனைகிறது இவ்வுலகின் கைகள்!!

உன் பெண்ணை உலகின்
பார்வையில் இருந்து மறைக்காதே!!

உன் மகனுக்கு கற்றுத்தா
பெண்களை மதிக்கும் கலையை!!

அங்கே தொடங்கட்டும் பெண் சுதந்திரத்திற்கான புதிய விடியல்!!

எழுதியவர் : ரசிகா (29-Mar-16, 10:36 am)
பார்வை : 80

மேலே