மலர்க் கோலம்
பெண்ணே நானும் அவனும்
நீ கோலமிடும் அழகை தானே
இரசித்துக் கொண்டிருந்தோம்.
என்ன தவறு செய்தோம் நாங்கள் ?
என்னைப் பறித்து
வாசலில் கோலமாய் வீசினாய்
அவனைப் பறித்து உன்
விழிகளில் காதலைப் பேசினாய்.
கோலத்தில் வீசப்பட்ட ஒரு மலர்.