வலதுகை கட்டைவிரல்

இலவசப் பயணம் நாடி
சாலையோர சமிக்ஞை..
ஒரு மென்பானத்தின்
விளம்பரக்குறியீடு..
முகநூலில் விருப்பம்
என்கிறதை தவிரவும்
வெற்றிக்கான வாழ்த்துக்கூற
வாழ்த்துச்சின்னமாகவும்
காண்பிக்கப் படுகிற
வலதுகை கட்டைவிரலை
ஏகலைவனிடமிருந்து
குருதட்சிணையாய்
துரோணாச்சாரியார்
ஏன் கேட்டார் என்பதை
உணர்ந்து கொண்டேன்..
இரு சக்கர வாகன விபத்தில்
என் வலதுகை கட்டைவிரல்
காயத்துக்கு கட்டுப்போட்டு
பொழுதுகளை கழித்த நாட்களில்..

எழுதியவர் : ஜி ராஜன் (30-Mar-16, 2:25 pm)
பார்வை : 90

மேலே