குடையாகும் மரங்கள்

குடையாகும் மரங்கள்


குடையாகும் மரங்கள்
கோடைகால தாகங்கள்
நிரையாத குளங்கள்
நிழலாடா நீர் துளிகள்

கஞ்சன்கள் ஆகும் எண்ணங்கள்
காலியாகும் குடங்கள்

தாமரைகள் வேர்கள் காட்டும்
தாய்மார்கள் வஞ்சகம் பாராட்டும்

நிழல் விழாமல் காத்துக்கொள்ள
நிழல் தேடும் பறவைகள் ஆவோம்

முகங்கள் வாடாமல் பாத்துக்கொள்ள
முகங்கள் தெரியும்
தண்ணீரை நாடுவோம்

உபயோகம் இல்லையேல்
விறகுகள்
உபயோகம் இருந்தால்
விதைகள்

பாகுபாடு காட்டினாலும்
வேறுபாடு காட்டாமல் வாழும்
மரங்கள்

கோடையில் கோடாரிகாரருக்கும்
குடையாகும்

-மனக்கவிஞன்

(தலைப்பு எழுத்துத் தள தோழர் வழங்கினார்)

எழுதியவர் : மனக்கவிஞன் (31-Mar-16, 10:23 pm)
பார்வை : 205

மேலே