நிஜமடி பெண்ணே
கணவனின் காலடி
சுவர்க்கம் என்கிறாள் ஒருத்தி...
கணவன் வந்தால்
சிறை என்கிறாள் இன்னொருத்தி...
கணவனை தன் மார்பில்
அணைக்கிறாள் ஒருத்தி...
கணவனை ஏளனம்
செய்கிறாள் இன்னொருத்தி...
வேலை முடித்து
தேகம் களைத்து
மதிப்பை பெற்றவன்
செல்கிறான் வீட்டிற்கு...
ஏளனம் பெற்றவன்
செல்கிறான் சின்ன வீட்டிற்கு!
***