இறைநிலை

குறைகள் கொண்டும்
கறைகள் பலவால்
சிறைப் பட்டாலும்
முறைகள் அறியாவிடினும்
மறைநிலை தம்மில்
இறைநிலை என்றும்
உறைவது உண்டு
மிறையது கொள்ளாமல்
பொறையுடன் உணர்விலே
நிறையது காண்

செல்வா

பி.கு : மிறை - வருத்தம், வேதனை

எழுதியவர் : செல்வா (1-Apr-16, 6:07 pm)
பார்வை : 111

மேலே