எம் பையம் பேரு பில்குல், எம் பையம் பேரு பில்குல்

எம் பையம் பேரு பில்குல், எம் பையம் பேரு பில்குல்
என்னண்ணே நடிகர் வடிவேலு ஒரு படத்திலே ”நானும் ரவுடி தாய்யா.. நாஞ் ஜெயிலுக்குப் பொறேன், நாஞ் ஜெயிலுக்குப் போறேன்” –ன்னு சொல்லிட்டு, காவல் ஆய்வாளர் தடுத்தும் கேட்காமல் அவரே போய் போலீஸ் ஜீப்பில ஏறிக்குவாரு. அது மாதிரி ”எம் பையம் பேரு பில்குல், எம் பையம் பேரு பில்குல்” – ன்னு சந்தோசமாச் சொல்லிட்டே வீட்டுக்குள்ள போறீங்க.
==
ஆமாண்டா வேலுச்சாமி, வடிவேலு ஜெயிலுக்கு எப்பிடி சந்தோசமாப் போனாரோ அது மாதிரி இன்னிக்கு ரொம்ப சந்தோசமா வீட்டுக்குள்ள நோழையறேன்.
==
என்னண்ணே அவ்வளவு சந்தோசம்?
==
தம்பி எனக்கு கல்யாணம் ஆகி அஞ்சு வருசத்துக்கப்பறம் மூணு நாளைக்கு முன்னாடி தான் ஒரு அழகான செவச்செவனு ஒரு ஆண் கொழந்தையை என்னோட மனைவி அருளரசி பெத்தெடுத்திருக்கறா. மருத்து மனையிலே பையனோட பேர பதிவு பண்ணக் கேட்டாங்க. நானும் அருளரசியும் அடிக்கடி இந்தித் தொலைக்காட்சி தொடர் பாக்கறவங்க. அந்தத் தொடர்கள்ல் அடிக்கடி ” பில்குல் பில்குல்” –ன்னு சொல்லுவாங்க. நாங்க ரண்டு பேரும் எங்களுக்கு பொறக்கற கொழந்தைக்கு ‘பில்குல்’ – ன்னுதாம் பேரு வைக்கணும்னு முடிவு பண்ணிட்டோம். ‘பில்குல்’ சொல்லறதுக்கு இனிமையா இருக்கற அழகான பேருன்னு அருளரசி சொன்னா. அந்தப் பேரையே எங்க குட்டிப் பையனுக்கு வச்சு பதிவு பண்ணிட்டோம். அந்த சந்தோசத்திலெ தான் நா வடிவேலு மாதிரி நடந்திட்டென்.
==
சரிண்ணே. ‘பில்குல்’ - ன்னா என்ன அர்த்தம்?
==
அட போடா தம்பி. பேருக்கெல்லாம் யாருடா அர்த்தம் பாப்பாங்க. இந்திப் பேர வைக்கறது தான் நம்ம தமிழ்ப் பண்பாடுன்னு எங்களுக்குத் தெரியாதா என்ன?
==
நீங்க சொல்லறதும் சரி தான் அண்ணே. நா வர்றேன். நாளைக்கு கொழந்தையைப் பாக்க வர்றேன். அண்ணிகிட்டச் சொல்லுங்க.
==
சரிடா தம்பி வேலுச்சாமி.
================================================================================================================
சிந்திக்க. மொழிப் பற்றையும் மொழி சார்ந்த இனப்பற்றையும் வளர்க்க. பிற மொழிச் சொல்லின் பொருள் அறிய.
=================================================================================================================
Blkul = All = बिल्कुल
= ABSOLUTELY, APPARENTLY = கட்டுக்கடங்காத, முழுமையான, வெளிப்படையான, முற்றிலும், தெளிவான, தெளிவாகப் புரிந்து கொள்ளத்தக்க
**************************************************************************************************************************************************************************************************************