தோற்றுத்தான் போகிறேன்

முகத்தில் பட்ட மழைநீரை
கைகளால் ..துடைத்துக் கொள்வது போலவே
என்னிடம் பொய்யாக சிரிக்கும் அவரை
எதிர்கொள்கிறேன் ..

..
என்னோடு கைகுலுக்க
ஒரு சிறிய புன்னகையுடன்
வருகின்ற அவரை !

..

எனக்குத் தெரியும்..
அது எவ்வளவு
கஷ்டமான காரியம் என்பது..

..
பாரங்களை ..
மறைத்துக் கொண்டு
நானும் கூட
புன்னகைக்க முயன்று தோற்றதுண்டு
சில நேரங்களில் ..
..
எளிதாக எப்போதும்
அகத்தின் அழகு
முகத்தில் தெரியாமல்
சிரித்தபடியே முகமன் கூறும்
முகமூடிகள்
வைத்துக் கொள்ளாததால்..!

எழுதியவர் : கருணா (பாலகங்காதரன்) (2-Apr-16, 11:29 am)
பார்வை : 496

மேலே