காதல் கணம்

இதயத்தை எழுதியனுப்பினேன்
கசக்கி எறிந்தாய்

உனக்குத் தெரியுமா - அது என்
உயிரின் நகல் என்று?

ஒரு பெண் சிசுவைப்போல்
குப்பைத் தொட்டியில்
எறிந்துவிட்டுப் போகிறாய்

பாவம் அந்தக் குப்பைத் தொட்டி
என் இதயச்சுமை தாங்காமல்
பைசா கோபுரமாய் சாய்ந்து நிற்கிறது!

எழுதியவர் : விநாயகன் (4-Apr-16, 2:20 pm)
சேர்த்தது : விநாயகன்
Tanglish : kaadhal kanam
பார்வை : 141

மேலே