நிர்மலமான நீல வானம்
நிர்மலமான நீலவானில்
களங்கத்துடன் ஒரு முழுநிலவு
வருத்தத்துடன் ...
கலக்கம் ஏன் ?
இயற்கை ஓவியன்
வெண்மையில்
தூரிகையால் வரைந்த
சாம்பல் நிறக் கோடுகள்
அதுவும் அழகுதான்
என்றது வானம்..
----கவின் சாரலன்

